Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்!

பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்!

முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் சந்தோஷமாக இருந்ததை வீடியோ ரெக்கார்ட் செய்து பெண் ஒருவர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை தி.நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கு காலத்தில் முகநூலில் ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.
அந்த நெருக்கம் இருவருக்கிடையே அதிகமானதால் வீடியோ கால் மூலமாக இருவரும் சந்தோஷமாக இருந்துள்ளனர்.

அந்தப் பெண் அந்த இளைஞருக்கு தெரியாமல் வீடியோ காலை ரெக்கார்ட் செய்து மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
பணம் தராத பட்சத்தில் இதை முகநூலில் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக கூறி பணம் பறித்துள்ளார். இதுவரை அவரிடமிருந்து 80 ஆயிரம் ரூபாயைக் கறந்துள்ளார்.

அந்தப் பெண் தொடர்ந்து பணம் கேட்டு நச்சரிக்கவே அந்த வாலிபர் அருகிலுள்ள பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சைபர் கிரைம் போலீசார் அந்த பெண்ணை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்கள் இந்த மாதிரியான ஆபாச தொழில் சமூக வலைதளங்களில் செய்து வருவது அதிகரித்துள்ளது.

Exit mobile version