கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் மார்ச் முதல் மே மாதம் வரை கடன் தவனை வசூலிக்க கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சலுகை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இதனை பெரும்பாலான வங்கிகள் அதனை மதிக்கவில்லை என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த லாரி உரிமையாளர், தவணை தேதிக்கு முன்னரே ஐசிஐசியை வங்கி தனது கணக்கிலிருந்து தவனையை எடுத்துள்ளது என காவல்துறையில் புகாரளித்துள்ளார். அதில் தான் ஒவ்வொரு மாதம் 22ம் தேதி 65642 ரூபாய் தவனை செலுத்துவது வழக்கம் என்றும், தவனை சலுகை அறிவிக்கப்பட்டதையடுத்து வங்கியில் அந்த சலுகையை எடுக்க விண்ணிப்பித்திருந்ததாகவும் ஆனால் மே மாத தவனையை 5ம் தேதியே வங்கி எடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வங்கியிடம் புகாரளித்த போது பணத்தை திரும்ப செலுத்துவதாக சமாதானம் கூறியவர்கள் தொடர்ந்து இழுததடித்து வருவதையடுத்து தனது வங்கி கணக்கை வங்கி நிர்வாகம் தன்னிச்சையாக கையாளுவதாகவும், ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி செயல்படும் ஐசிஐசிஐ வங்கியின் அம்பத்தூர் கிளை மேலாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் யுவராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.