செரிமானப் பிரச்சனை,மலசிக்கல் போன்ற காரணங்களால் கெட்ட வாயுக்கள் அதிகளவு வெளியேறுகிறது.சிலருக்கு வயிறு உப்பசம்,வயிறு வீக்கம்,வயிறு வலி போன்றவை ஏற்படுகிறது.வாயுத் தொல்லையை உட்கார்ந்த இடத்தில் இருந்தே சரி செய்து கொள்ள முடியும்.
தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாயு முத்திரை செய்தால் வாயுத் தொல்லை கட்டுப்படும்.அது மட்டுமின்றி வாயு முத்திரை செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
வாயு முத்திரை பலன்கள்:
கை விரல் மூன்றை பயன்படுத்தி வாயு முத்திரை செய்ய வேண்டும்.மோதிர விரல்,நடு விரல்,பெரு விரல் ஆகிய மூன்றின் நுனியும் ஒன்றுடன் ஒன்று தொடும்படி வைக்கவும்.அதன் பிறகு சுண்டு விரலை நேராக நீடிக்கக் கொள்ளவும்.இதையே வாயு முத்திரை என்கின்றோம்.இதற்கு மிருத்யு சஞ்சீவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.
தினசரி 30 நிமிடங்கள் வாயு முத்திரை செய்தால் வாயுத் தொல்லை மட்டுமின்றி உடலில் உள்ள பல நோய் பாதிப்புகள் குணமாகும்.
வாயு முத்திரை செய்வதால் இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.நெஞ்சு சளி,உயர் இரத்த அழுத்தம் போன்றவை குறையும்.
இதய படபடப்பு உள்ளவர்கள் தினமும் 45 நிமிடங்கள் வாயு முத்திரை செய்யுங்கள்.மலச்சிக்கல்,மூல நோய் போன்றவை வாயு முத்திரை மூலம் சரியாகும்.சிரமமின்றி சிறுநீர் வெளியேற வாயு முத்திரை செய்ய வேண்டும்.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்ய வாயு முத்திரை செய்யலாம்.
இந்த வாயு முத்திரையை தரையிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து செய்யலாம்.ஆனால் படுத்த நிலையில் மட்டும் வாயு முத்திரை செய்யக் கூடாது.அதேபோல் கர்ப்பிணி பெண்கள் வாயு முத்திரை செய்வதை தவிர்க்க வேண்டும்.வாந்தி மற்றும் பேதி உள்ளிட்ட உடல் நலக் கோளாறு உள்ளவர்கள் வாயு முத்திரை செய்யக் கூடாது.சாப்பிட்ட பிறகு வாயு முத்திரை செய்வதை தவிர்க்க வேண்டும்.