மென்பொருள் நிறுவனங்களில் முன்னணியாக விளங்கி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்களது ஊழியர்கள் விரும்பினால் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடக செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக பெரும்பான்மையான ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இருப்பினும் தற்பொழுது நோயின் அளவு குறைவடையும் நிலையில், ஊழியர்கள் விரும்பினால் நிரந்தரமாகவே வீட்டிலிருந்தே பணியாற்ற வாய்ப்பளிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுகுறித்து வெளியான தகவலில்,கொரோனா பேரிடர் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தற்போது வரை வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தை அடுத்த ஆண்டு ஜனவரி வரையிலோ அல்லது அதற்கு முன்பாகவோ திறக்கப்படுவது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் காத்திருக்கவில்லை என்றும், ஊழியர்கள் விரும்பினால் நிரந்தரமாகவே வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.
மேலும், இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தரப்பில் கூறுகையில் , கொரோனா பேரிடர் காலத்தில் மனிதனின் வாழ்க்கை முறை ,சிந்தனை, வேலை என அனைத்து செயலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப பணிகளை பணியாற்றும் சூழ்நிலையை வடிவமைத்துக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.