Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாடு மின் ஆளுமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!! இந்த மாவட்டங்களின் பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாடு மின் ஆளுமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!! இந்த மாவட்டங்களின் பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் e-District Manager காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.நாமக்கல்,திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மின்-மாவட்ட மேலாளர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகம்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 8

மாவட்டங்கள்: நாமக்கல்,நாகப்பட்டினம்,பெரம்பலூர்,திருச்சி,வேலூர்,காஞ்சிபுரம்,விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் கணினி அறிவியல்,கணினி அறிவியல் & பொறியியல்,தகவல் தொழில்நுட்பம்,தகவல் தொடர்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் பி.இ மற்றும் பி.டெக். பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் ஏதாவது ஒரு இளநிலை பட்டத்துடன் எம்.சி.ஏ மற்றும் எம்.எஸ்.சி பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள்  https://tnega-edm.onlineregistrationform.org/TEG/  என்ற இணையதளத்தில் மேற்கண்ட தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தொலைபேசி எண்: 044-40016235

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்ப கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய ரூ. 250/- என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேதி: 21-08-2023 முதல் 11-09-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: 24-09-2023 அன்று கணினி வழி மூலம் தேர்வு நடத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள அந்தந்த  மாவட்டத்தைச்  சேர்ந்த பட்டதாரிகள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பிக்கும் நபர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான இருப்பிட சான்றிதழ் அல்லது பிறப்பிட சான்றிதழை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version