Empuraan Collection: மலையாளர் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம்தான் எம்புரான். 2019ம் வருடம் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் போல எம்புரான் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மன்சு வாரியர், பிரித்திவிராஜ் மற்றும் ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் நடித்திருக்கிறார்கள்.
மலையாள சினிமா என்றாலே இயல்பான கதை சொல்லல் என்கிற ஃபார்முலாவை மீறி, மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார் பிருத்திவிராஜ். பாலிவுட், ஹாலிவுட் படங்கள் போல இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. நேற்று காலை இப்படம் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்திற்கு அதிக அளவில் முன்பதிவு இருந்தது. தமிழில் விடாமுயற்சியை விட இந்த படத்திற்கு அதிக டிக்கெட் முன்பதிவு இருந்தது.
இந்நிலையில், எம்புரான் படம் முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்றிருக்கிறது. மலையாள மொழியில் 19 கோடி, தெலுங்கில் 1.2 கோடி, தமிழில் 80 லட்சம், ஹிந்தியில் 50 லட்சம் மற்றும் கன்னடத்தில் 5 லட்சம் என மொத்தம் 21.55 கோடி என இந்தியாவில் மொத்தம் 21.55 கோடியை இப்படம் வசூல் செய்திருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை மற்றும் தொடர்ந்து சனி, ஞாயிறு என விடுமுறை நாட்கள் வருவதால் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
ஒருபக்கம் விக்ரமின் வீர தீர சூரன் படம் நேற்று காலை வெளியாகவிருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் நேற்று மாலை 5 மணிக்கே முதல் காட்சி வெளியானது. இரவு ஒரு காட்சி என மொத்தம் 2 காட்சிகள் மட்டுமே நேற்று திரையிடப்பட்டது. இதனால் இந்த படம் 3.2 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதேநேரம், இனிமேல் அந்த படத்தின் வசூலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.