Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்கவுண்டர் எல்லாம் பாஜக பக்கம் திரும்பாதா? கொள்ளப்பட்ட குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் விசிக

என்கவுண்டர் எல்லாம் பாஜக பக்கம் திரும்பாதா? கொள்ளப்பட்ட குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் விசிக

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாம்ஷாபாத் பகுதியை சேர்ந்த பெண் கால்நடை டாக்டர் கடந்த 27-ம் தேதி 4 நபர்களால் கொடூரமான முறையில் கற்பழித்து எரித்து கொலை செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு, கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதிலிருந்தும் கோரிக்கை வந்தது, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் ‌என 10 நாட்களாகவே தெலுங்கானா பற்றி எரித்தது,.
இந்த சூழ்நிலையில் 4 பேரும் என்கவுண்டர் மூலம் தெலுங்கானா காவல்துறையினரால் கொல்லப்பட்டனர், இதனால் நாடு முழுவதும் மக்கள் தெலுங்கானா போலீசாரை வாழ்த்தியும் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடியும் வருகின்றனர்.

https://twitter.com/VanniArasu_VCK/status/1203180639006142465?s=19

விழுப்புரம் நவீனா என்ற மாணவியை தீயிட்டு கொளுத்தி கொடூரமான முறையில் கொன்றவனுக்கு ஆதரவாக பழியை பாமக மீது போட்டு நாடகமாடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி,. விருத்தாசலம் அருகே கருவேப்பலங்குறிச்சி கிராமத்தில் திலகவதி என்ற இளம்பெண்னை கத்தியால் குத்தி கொலை செய்தவன் தானே குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், கொலை நடக்கும் போது கொலை செய்தவன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தான் என்று கூறிய திருமாவளவனும் அதன் கூடாரமும்,.

தற்போது பாஜக பக்கம் என்கவுண்டர் திரும்பாதா என்று டிவிட்டர் மூலம் பாஜகவை வம்புக்கு இழுத்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு,.

Exit mobile version