Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு குறித்து தொடுக்கப்பட்ட மனுவில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு :?

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யக் கோரி, இந்தியா முழுவதும் 31 மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர்.இறுதியாண்டு தேர்தலை நடத்தாமல் மார்க் சீட் தர இயலாது என்று உத்தரவிட்ட யுஜிசி தேர்வினை கட்டாயம் நடத்தித் தர வேண்டும் என்று கூறுகிறது.

இருப்பினும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தேர்வினை நடத்த உச்ச நீதிமன்றத்தில் உத்தரவிட்டது . நோய்த்தொற்று கட்டுக்குள் வராத நிலையில் தேர்வினை எப்படி நடத்த முடியும் என்ற கேள்வி எழுப்பிய மனுத்தாக்கல் வழக்கறிஞர்,தேர்வினை ரத்து செய்யக் கோரினார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.அசோக் பூஷன், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோரைக் கொண்ட அமர்வு இம்மனுவை விசாரித்து வருகிறது.

யுஜிசி தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, ‘இறுதியாண்டு தேர்வுகளை தள்ளி வைக்கலாம், தாமதப்படுத்தலாம்; ஆனால் ரத்து செய்ய முடியாது

மாணவர்களின் எதிர்காலம் தேர்வு அடிப்படையில் உள்ளதனால் இதனை அலட்சியம் காட்டாமல் தள்ளிவைக்க ரத்து செய்ய இயலாது என்று வாதிட்டார்.

பேரிடர் மேலாண்மை சட்டப்படி முடிவு எடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசு கொண்டுள்ளது. இதில் ஒட்டுமொத்த நாடும் செயல்படுகிறது. மாணவர்கள் 21 – 22 வயது கொண்டவர்கள் வெளியே செல்ல மாட்டார்கள் என்பதை உங்களால் உண்மையில் நம்ப முடிகிறதா?’ என்று கேள்வி எழுப்பினார் நீதிபதிகள்.

இதனைத்தொடர்ந்து இனிமேல் இந்த வாதங்களை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் அனைத்து தரப்பிலும் வாதங்கள் மீதான எழுத்துப்பூர்வமாக அறிக்கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.இதனைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


 

Exit mobile version