Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சதி செய்யும் அண்ணாத்த! சிம்புவை தொடர்ந்து விஷால் படத்துக்கு ஏற்பட்ட சோதனை!

நடிகர் சிம்பு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த திரைப்படம்தான் மாநாடு. ஹிந்தி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் டி ராஜேந்திரன் மாநாடு திரைப்படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் சதிச்செயல் நடப்பதாக தெரிவித்துள்ளார்.

இத்தகைய நிலையில் டி ராஜேந்தர் கூறிய அதே விஷயத்தை விஷாலின் படத்தின் தயாரிப்பாளரும் குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார். ஆர்யா மற்றும் விஷால் ஆகிய முக்கிய நடிகர்கள் இருவரும் நடித்து உருவாகிய திரைப்படம் தான் எனிமி. எங்க திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி ரிலீசாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதே நாளில் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாதுரை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகைகளான நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் மற்றும் மீனா ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு டி இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் டீசரும், மூன்று பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் தீபாவளிக்கு வெளியாவது காரணமாக மற்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளது.

இத்தகு இந்நிலையில் விஷாலின் எனிமி திரைப்பட தயாரிப்பாளர் வினோத்குமார் திரைப்படத்தில் தான் தனது படம் வெளியாகவில்லை என்றும், தனது திரைப்படத்திற்கு திரையரங்குகளில் ஒதுக்கப்பட வில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் ரஜினியின் அண்ணாதுரை திரைப்படம் வெளியாக உள்ளது. ஆனால் இனிமே படக்குழு தங்களது திரைப்படத்திற்காக 250 தியேட்டர்களில் மட்டுமே கேட்டுள்ளது. இருப்பினும் அது கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தில் திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் எனிமி திரைப்படத்தின் இயக்குனர் வினோத் குமார் தற்போது கோரிக்கை வைத்துள்ளார்.

Exit mobile version