Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல் முறையாக சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினரின் மீது பாய்ந்த அமலாக்கத்துறை!! 

பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் அண்மையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து  நடிகர் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரது சகோதரி, நண்பர், மேலாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

சுஷாந்த்தின் சிங்கின் வங்கி கணக்கில் ரூபாய் 15 கோடி பணம் மோசடி செய்யப்பட்டதாக அவரது தந்தை கே.கே சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

எனவே  அந்த புகாரில் சுஷாந்த்தின் தோழி ரியா சக்கரவர்த்தி,  அவரது தாயார் சந்தியா சக்கரவர்த்தி, சகோதரர் ஜோவிக், சுஷாந்த்தின் மேலாளர்  மிராண்டா, ஸ்ருதி மோடி ஆகியோர் மோசடியில் ஈடுபட்டு எனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்தார்.

இதன்பின் அமலாக்கத் துறையினர் ரியா சக்கரவர்த்தியிடம் திங்கள்கிழமை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சுஷாந்த்தின் மூத்த சகோதரி மீட்டு சிங், சித்தார்த் , வர்த்தக மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோரிடம் அடுத்தடுத்து  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதுவரை சுஷாந்த் சிங் வழக்கில் அவரது குடும்பத்தை சந்தேகப்படாத நிலையில் தற்போது முதல்முறையாக சுஷாந்த்தின் குடும்பத்தை சேர்ந்த அவருடைய மூத்த சகோதரி இடம் விசாரணை  நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version