கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும்! எளிமையாக நடந்துகொண்ட தினகரன் காரணம் இதுதான்!

0
201

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான, டிடிவி தினகரன் ஒரே மகள் ஜெய ஹரிணி.

இவருக்கும், தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி வாண்டையார் அவர்களின் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின் மகனுமான, ராமநாதன் துளசி ஐயா வாண்டையாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிகழ்வில், டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ் என்கின்ற பாஸ்கரன், உள்பட இரு குடும்பத்தாரின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வு சுவாமிமலை பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது.

மணமகனுடைய பாட்டனார் துளசி அய்யா வாண்டையார் கடந்த 1991 முதல் 96 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், இவர் நேற்று நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

தஞ்சையில், பாரம்பரியமிக்க குடும்பமாக எல்லோருக்கும் தெரிந்தது பூண்டி துளசி அய்யா வாண்டையார் குடும்பம்.

இவருடைய மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் பல பதவிகளை வகித்தவர், தற்போது தெற்கு மாவட்ட தலைவராகவும் இருந்து வருகின்றார்.

இவருடைய மகன் ராமநாதன் துளசி ஐயா, இப்போது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றார்.

தன்னுடைய ஒரே மகள் ஜெய ஹரிணியை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் நினைத்திருந்தார்.

ஆரம்பத்திலே மணமகன் தரப்பிலிருந்து தன்னுடைய மகளை பெண் கேட்டு அணுகியபோது, டிடிவி தினகரன் அந்த விஷயத்தை சசிகலாவிடம் தெரிவித்திருக்கின்றார்.

துளசி ஐயா மீது மிகுந்த மதிப்பு கொண்ட அவர் மிகவும் சந்தோஷம் அடைந்ததுடன், உடனே அதற்கு சம்மதம் தெரிவித்து விட, அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து முடிந்தன.

சசிகலா அவர்கள் சிறையில் இருந்து விரைவிலேயே வெளியே வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட காரணத்தால், அவர் தலைமையிலேயே நிச்சயதார்த்த விழாவை நடத்தி விடலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள்.

ஆனாலும் இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட டிடிவி தினகரன். நிச்சயதார்த்த விழாவை எளிமையாக நடத்துவதற்கு முடிவெடுத்து அதற்கான ஏற்பாட்டை செய்து விட்டார்.