பொறியியல் படிப்புகளில் ஆர்வமுடைய மாணவர்கள் ஆங்கிலம் சரியாக தெரியாததால் படிப்பை நிறுத்தும் அபாயம் கூட ஏற்பட்டுள்ளது. சாதாரண பழங்குடி மக்கள் கூட பொறியியல் படிப்பிற்கு படிக்க அவர் அவர்களது தாய்மொழியில் பொறியியல் படிப்புகள் நடத்தலாம் என ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது..
தமிழ் உள்ளிட்ட மற்றும் 8 மொழிகளில் பொறியியல் படிப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, கன்னடம், மராத்தி மற்றும் வங்க மொழிகளில் 2020-21 கல்வி ஆண்டில் பொறியியல் பாடங்களை நடத்துவதற்கு AICTE அனுமதி அளித்துள்ளது.
தொழில்நுட்பக் கல்வியை மாணவர்களின் தாய்மொழியிலேயே கற்பிப்பது தான் தங்களது நோக்கமென ஏஐசிடிஇ தலைவர் அனில் சாஸ்டிரபுத்தே கூறியுள்ளார். அவர்களது தாய் மொழியில் பாடங்களைக் கற்பிப்பதற்கு மூலம் அடிப்படையான தொழில்நுட்பக் கல்வியின் விஷயங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் இளநிலை பட்டப் படிப்பையும் 11 மொழிகளில் நடத்த திட்டமிடல் செய்யப்பட்டு வருகிறது.
கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள் எளிதில் தொழில் படிப்பை படிக்க முடியும். அவர்களின் மத்தியில் தொழிற்படிப்பு படிக்கும் வாய்ப்புகளை அதிகமாக உருவாக்க முடியும். பலபேர் ஆங்கிலம் சரியாக தெரியாததால் தொழில் படிப்புகளில் சேர தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால் அவர்களது தாய்மொழியில் தொழில் படிப்புகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக தொழில் படிப்புக்கு மதிப்பு கூடும்.
ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், தங்களது தாய் மொழியில்தான் பாடங்களை கற்பிக்கின்றனர்.