Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்!

#image_title

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்!

பணப் பிரச்சனை இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போகும்.எதற்கும் பணம் தான் தேவைப்படுகிறது.இந்த பணம் இல்லாவிட்டால் வீட்டில் தேவையில்லா சண்டை,மனக் கசப்பு ஏற்படும்.

பணத்தை வைத்து தான் இந்த சமூகம் ஒரு மனிதனுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாவிட்டால் பிணத்திற்கு உள்ள மதிப்பு கூட மனிதனுக்கு கிடைக்காது.இந்த பணத்தின் வரவை எவ்வாறு அதிகரிப்பது என்று தெரியாமல் பலர் புலம்பி வருகின்றனர்.இதற்கு ஆன்மீக வழியில் தீர்வு இருக்கிறது.

பண வரவு அதிகரிக்க வசம்பு பரிகாரம் செய்வது நல்லது.வசம்பு பணத்தை ஈர்த்து கொடுக்க கூடிய ஒரு பொருள் ஆகும்.வசம்பு எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய ஒரு பொருள்.

இந்த வசம்பு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஒரு துண்டு வாங்கிக் கொள்ளவும்.பின்னர் பூஜை அறையில் மகா லட்சுமி தயார் படத்திற்கு முன் வைத்து பணப் பிரச்சனை நீங்க வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

அதன் பின்னர் இந்த வசம்பை வீட்டில் பணம் வைக்கின்ற இடத்தில் வைத்து விடவும்.இவ்வாறு செய்தால் பண வரவு அதிகரிக்கும்.இந்த வசம்பை மூன்று ஒருமுறை மாற்றினால் போதுமானது.

Exit mobile version