வேஸ்ட் என்று தூக்கி எறியும் இந்த பொருட்கள் மட்டும் போதும்!! வீடே மணக்கும் தூப பொடி தயாரிக்கலாம்!!

0
97

நம் பூஜை அறையில் இருக்கக் கூடிய முக்கிய பொருட்களில் ஒன்று சாம்பிராணி தூபம்.இதை கடையில் வாங்காமல் வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் தயாரித்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

1)பன்னீர் ரோஜா பூ – ஒரு கப்
2)மல்லிகை பூ – கால் கப்
3)சம்பங்கி பூ – கால் கப்
4)சாமந்தி பூ – கால் கப்
5)கற்பூரம் – பத்து கட்டி
6)இலவங்கம் – இருபது
7)பச்சை கற்பூரம் – ஐந்து
8)ஏலக்காய் – ஐந்து
9)பெருஞ்சீரகம் – இரண்டு தேக்கரண்டி
10)நெய் – ஒரு தேக்கரண்டி
11)பன்னீர் தண்ணீர் – அரை தேக்கரண்டி
12)தேன் – ஒரு தேக்கரண்டி
13)தண்ணீர் – ஒரு தேக்கரண்டி

சாம்பிராணி செய்முறை:

1.முதலில் சாமந்தி,மல்லிகை,சம்பங்கி மற்றும் பன்னீர் ரோஜா பூக்களை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.காய வைத்த பூக்களில் ஈரம் இருக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து பற்றவைத்து சூடாக்க வேண்டும்.அதில் ஏலக்காய்,பெருஞ்சீரகம்,இலவங்கம் உள்ளிட்ட பொருட்களை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

3.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

4.பின்னர் காய வைத்த பூக்களை அதில் போட்டு ஒரு சுத்துவிட்டு எடுக்க வேண்டும்.பிறகு கற்பூரம்(சூடம்),பச்சை கற்பூரம் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

5.பிறகு இதை அகலமான கிண்ணத்தில் கொட்டி ஒரு தேக்கரண்டி தேன்,அரை
தேக்கரண்டி பன்னீர்,ஒரு தேக்கரண்டி தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

5.பிறகு இதை சாம்பிராணி அச்சில் வைத்து பிடிக்க வேண்டும்.இந்த சாம்பிராணியை ஒரு தட்டில் வைத்து நன்றாக காய வைக்க வேண்டும்.

6.பின்னர் இதை சேகரித்து வைத்து பூஜை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம்.கடைகளில் விற்கும் சாம்பிராணியைவிட இந்த ஹோம்மேட் சாம்பிராணி அதிக வாசனை நிறைந்த ஒன்றாகும்.

7.இந்த சாம்பிராணியை வீட்டில் பற்ற வைத்தால் வீட்டிற்குள் தெய்வீக மணம் வீசும்.அதேபோல் இந்த சாம்பிராணி பொடியை விளக்கில் போட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினாலும் வீட்டிற்குள் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.