வீட்டிலிருக்கும் வெங்காயம் போதும்! இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம்
வீட்டிலிருக்கும் வெங்காயத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க. உடலில் உள்ள ரத்த சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
என்ன செய்தாலும் இரத்த சர்க்கரையை அதாவது நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தவிப்பவர்களா நீங்கள். அப்போ வீட்டில் உள்ள வெங்காயத்தை பயன்படுத்தி இரத்த சர்க்கரையை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
வெங்காயத்தில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்டுகளையும் ஃபிளவனாய்டுகளும் இருக்கின்றது. இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்காமல் வைத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையை அதிகரிக்காமல் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் வெங்காயத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
வெங்காயத்தின் வகைகள்
உலகம் முழுவதம் உணவுப் பொருளாக உள்ள வெங்காயம் பல வகைகளாக உள்ளது. வெள்ளை வெங்காயம், மஞ்சள் நிற வெங்காயம், சிவப்பு நிற வெங்காயம், இனிப்பு வெங்காயம் என உலகம் முழுவதும் பல வகைகளாக இருக்கின்றது. இருப்பினும் இந்தியாவில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற வெங்காயங்களே அதிக அளவு கிடைக்கின்றது. இவ்வாறு முக்கியமான உணவுப் பொருளாக உள்ள வெங்காயத்தின் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.
நார்ச்சத்துக்கள் நிறைந்தது வெங்காயம்
வெங்காயமானது நமது குடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கும் தன்மையை கொண்டுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கரையக்கூடிய நார்ச்சத்துகள் நிறைந்ததுததான் வெங்காயம். வெங்காயத்தில் பிரக்டான்கள் எனப்படும் மூலக்கூறுகள் அதிகம் உள்ளது.
மற்ற நாடுகளில் கிடைக்கும் வெங்காயங்களை விட நம் நாட்டில் கிடைக்கும் சிவப்புநிற வெங்காயத்தில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்துகள் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
வெங்காயத்தில் உள்ள நார்ப்பொருள்கள் உணவு மூலக்கூறுகளை உடைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றது. இதனால் கார்போஹைட்ரேட்டுகள் வெளியேறுவது மெதுவாகி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள்ளேயே வைத்துள்ளது.
வெங்காயத்தில் குறைந்த கிளைசெமிக் குறியீடு
கிளைசெமிக் குறியீடு என்பது நமது ரத்தத்தில் சர்க்கரை எந்த அளவு மெதுவாக கலக்கின்றது என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
வெங்காயத்தில் மிகவும் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு உள்ளது. வெங்காயத்தின் கிளைசெமிக் குறியீடு 10. வெங்காயத்தில் குறைந்த அளவு கிளை செமிக் குறியீடு இருப்பதால் இது ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக சர்க்கரையை வெளியிடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வெங்காயத்தில் குறைந்த கார்போஹைட்ரேட்
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருள்களானது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்யும். ஆன்ல் வெங்காயத்தில் இந்த கார்போஹைட்ரேட் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் வெங்காயமானது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையும் மிக வேகமாக குறையும். வெங்காயத்தில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றது.
அதிக ஆன்டி ஆக்சிடன்டுகள் இருக்கும் வெங்காயம்
வெங்காயத்தில் சுமார் 17 வகையான ஃபிளாவனாய்டுகளும் ஆக்சிஜனேங்களும் உள்ளது. வெங்காயத்தில் இருக்கும் ஃபிளாவனாய்டுகளில் குர்செடின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிக அளவில் உள்ளது. இவை நீரிழிவுக்கான அறிகுறிகளை கட்டுக்குள் வைக்கும் என பல்வேறு ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு வெங்காயங்களில் அந்தோசயினின்கள் அதிக அளவு இருக்கின்றது. இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
வெங்காயத்தை எவ்வாறு எல்லாம் எடுத்துக் கொள்ளலாம்
* நாம் நம்முடைய எல்லா சமையலிலும் வெங்காயத்தை தவிர்க்க முடியாமல் எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு தவிர்க்க முடியாமல் உணவில் எடுத்துக்கொள்ளும் வெங்காயத்தை பச்சையாக உண்ணும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.
* காலை, மதியம், இரவு என ஒவ்வொரு வேலையும் உணவு உண்ட பின்னர் ஒரு பச்சை வெங்காயத்தை உண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றது.
* சாலட்டில் அதிக அளவு வெங்காயத்தை சேர்த்து சாப்பிட வேண்டும்.
* வெங்காயச் சாறினை எலுமிச்சை சாறுடன் கலந்து குடிக்கலாம்.
* காய்கறிகளை பொறியலாக வேகவைக்கும் போது வெங்காயத்தை முழுமையாக வேக வைக்காமல் பகுதி அளவு வேக வைத்து சாப்பிடலாம்.
இவ்வாறு வெங்காயத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது அதிகப்படியான சர்க்கரை இரத்தத்தில் குறைவதோடு நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.