Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

Enter the shop in broad daylight and steal money with a knife!

Enter the shop in broad daylight and steal money with a knife!

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

திருச்சி மாவட்டம்  மேலசிந்தாமணி பகுதியில் சேர்ந்தவர் ஷகீல். இவருடைய வயது 32. இவர் எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்காவின் அருகே ஹெல்மெட் விற்பனை செய்து வருகின்றார். இவர் வயிற்றுப் பிழைப்பிற்காக  சிறு கடை வைத்து தன் குடும்பத்தை நடத்தி  வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 21 மற்றும் அருண்குமார் இவருடைய வயது 19.

இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.இந்நிலையில் இருவரும் ஷகீலியின் கடைக்குள் சென்றிருக்கிறார்கள்.அப்போது திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கட்டியை காட்டி ஹெல்மெட் மற்றும் 2000 ரூபாய் பணம் உள்ளிட்ட பல பொருட்களை திருடி சென்றுள்ளார்கள். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் ஷகீல் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரபாகரன் மற்றும் அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் மற்றும் கத்தி உள்ளிட்ட பல ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பட்டபகலில் கடைக்குள் புகுந்து கத்திய காட்டி பொருள் மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Exit mobile version