திருப்பூரில் தொழில் முனைவோர் மண்டல மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக கோவை,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு சென்றுள்ளார்.இந்த பயணத்தின் போது அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும்,கட்சி கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்.அந்த வகையில் இன்று திருப்பூர் சென்ற அவர் அங்கு தொழில் முனைவோர் மண்டல மாநாட்டை தொடங்கி வைத்தார்.
திருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தொழில்முனைவோர் திருப்பூர் மண்டல மாநாடு திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், பிணையில்லாத கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம், நாரணாபுரம் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் தொழில் முனைவோர் மண்டல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசினார்.