உள்நாட்டு விமான பயணிகளுக்கான தமிழ்நாடு இ-பாஸ் (TN e-Pass) பெறும் வசதி இன்று மாலை 6 மணியுடன் திரும்பப் பெறப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வவையில் இ-பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வது தவிர்க்கப்படும் என்றும் மக்கள் எங்கே செல்கிறார்கள் என்பது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி இ-பாஸ் முறையை ரத்து செய்வதாகவும் பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு மட்டும் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
ஆனாலும், எல்லா விமான நிலையங்களிலும் உள்நாட்டு பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விமான நிலையம் ட்விட்டர் பக்கத்தில்,
https://twitter.com/aaichnairport/status/1306963277327425544?s=20
உள்நாட்டு விமான பயணிகளுக்கான தமிழ்நாடு இ-பாஸ் பெறும் வசதி இன்று மாலை 6 மணியுடன் திரும்பப் பெறப்படுவதாகவும், வெளிமாநிலத்தில் இருந்து வரும் பயணிகள் பயணத்தை தொடங்குவதற்கு முன் https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.