Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

EPF – இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

கொரோனா வைரஸ் பரவல் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மிகவும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது வந்தனர். அப்பொழுது தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியை வருங்கால வைப்பு நிதி அளித்துள்ளது.
அவ்வாறும் எடுக்கும் தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை என்றும் அதே போல் இப்பொழுது கொரோனவைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதால் மறுபடியும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீதம் பணத்தை எடுத்துக் கொள்ள வருங்கால வைப்பு நிதி கடந்த மாதம் அனுமதி அளித்தது. இப்பொழுது வேலையை இழந்து கணக்கில் வரவு செலுத்தப்படாதவர்களும் தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

கணக்கை முடிக்காமல் உள்ளதால் பென்ஷனுகான தகுதியும் தொடரும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அல்லது பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என பிஎஃப் நம்புகிறது.

Exit mobile version