மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

0
163

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த அந்நாட்டைச் சோ்ந்த மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் டில்லியில் செய்தியர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி “இந்தியர்களை எந்த வகையிலும் இந்த சட்டம் பாதிக்காது என் பார்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சட்டம் ஒழுங்கு கெடாத வகையில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மக்களுக்கு உரிமையுள்ளது.

இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது அதிமுக அரசின் கொள்கை. இதை 2016’ல் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். நானும் இதே கோரிக்கையை மோடியிடம் தெரிவித்துள்ளேன். மத்திய அரசிடம் தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்துவோம்.” என்று கூறினார்.