Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தில்லுமுல்லு செய்த ஸ்டாலின்! வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தின் முக்கிய கட்சியின் தலைவர்கள் அனைவரும் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல்வாதிகள் எல்லோரும் தங்களுடைய எதிர்கட்சிகள் மீது பலவிதமான குற்றச்சாட்டுக்களை வைத்து வருகிறார்கள்.
அந்த விதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது அனேக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்.

அந்த வகையில், அதிமுக அமைச்சர்களின் பலர் மிகப் பெரிய ஊழல்களை செய்திருப்பதாகவும், அதனை மத்திய அரசு சிபிஐ மூலமாக விசாரணை செய்யக்கூடாது என்ற காரணத்திற்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக சென்று கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எனவும் குற்றம் சுமத்தி வருகின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயி என்று தெரிவித்துக்கொண்டு பச்சைத் துண்டை போட்டுக்கொண்டு பச்சைப் பொய் சொல்லி வருகிறார் என்றும் விமர்சனம் செய்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.ஆனால் தற்போது இவ்வளவு பேசும் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் அப்பொழுது மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியுடன் காட்டிய நெருக்கத்தை சுட்டிக்காட்டி அதிமுகவினர் அவரை குற்றம் சாட்டி வருகிறார்கள்.

திமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த சமயத்தில் தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தது, அதன் மூலமாக தமிழகத்திற்கு என்ன நன்மை கிடைத்தது, என்பது போன்ற கேள்விகள் தற்சமயம் எழத் தொடங்கியிருக்கின்றன.

இதே திமுக மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக அந்த கட்சியுடன் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த சமயத்தில்தான் இலங்கை தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். அப்போது அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்த திமுக இப்போது அதிமுகவை குறை சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது என்பது போன்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

வாரம் ஒருமுறை டெல்லிக்குச் சென்ற கருணாநிதி நாட்டு மக்களை பற்றி மத்திய அரசிடம் எதுவுமே பேசவில்லை எனவும், தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பிரதிநிதித்துவத்தை மத்திய அரசிடம் வாங்கித் தருவதற்காக தான் அவர் வாரம் ஒரு முறை டெல்லி சென்று வந்தார் எனவும் விமர்சனம் எழுந்திருக்கின்றது.

மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் தான் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டது தற்சமயம் திமுகவின் தலைவராக இருக்கக்கூடிய சாட்சாத் இதே ஸ்டாலின் தான்.அவ்வாறு அப்பொழுது கையெழுத்து போட்டு அந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது திமுக, அதற்கு அனுமதி கேட்டது காங்கிரஸ் கட்சி, அவர் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு தற்போது இருக்கின்ற மத்திய அரசையும், மாநில அரசையும், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அரசியல் கட்சித் தலைவர்களைப் பொருத்தவரையில் எவ்வளவுதான் அரசியல் லாபத்திற்காக பொய் கூறினாலும் அதனை நம்புவதற்கு தற்போது இருக்கின்ற தமிழக மக்கள் தயாராக இல்லை தமிழக மக்கள் அனைவரும் உஷாராகி விட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

அதோடு இன்று கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்த சமயத்தில், ஒரு விவசாயி தமிழகத்தின் முதல் அமைச்சராக இருப்பது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு பிடிக்கவில்லை. முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா உயிரிழந்த பிறகு அதிமுக உடைந்துவிடும் ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்கு வந்து விடலாம் என்ற கனவில் இருந்த வந்தார். ஆனால் அவருடைய கனவு பலிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர்.

நான் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றி இருக்கின்ற திட்டங்களை தெரிவித்து பொதுமக்களிடம் மார்க்க சேகரிக்கிறேன். ஸ்டாலினால் முடிந்தால் அவர்செய்த நல்ல திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க சொல்லுங்கள். அவர் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.அதோடு ஒரு விவசாயியாக இருக்கும் நான் மழையிலும் வெயிலிலும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஆகவே ஒரு விவசாயி படும் கஷ்டம் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். விவசாயம் தொடர்பாக எதுவுமே தெரியாத ஸ்டாலினுக்கு அதுபற்றி பேசவும் தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

ஸ்டாலின் பிரச்சாரம் செய்த சமயத்தில் ஒரு முறை கரும்பு வயலுக்குள் சிமெண்ட் ரோடு போட்டு இருந்தார்கள். தமிழ்நாட்டிலேயே எங்காவது கரும்பு வயலுக்கு சிமெண்ட் ரோடு போட்டு பார்த்துள்ளீர்களா ஆனால் ஸ்டாலின் போகும்போது கரும்பு வயலில் சிமெண்ட் ரோடு போட வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்.

ஒரு விவசாயி மட்டுமே வயல்களில் இருக்கின்ற வரப்புகளில் நடந்து செல்ல இயலும் ஸ்டாலின் விவசாயி இல்லை என்ற காரணத்தால், தான் அவரால் வயல்வெளியில் நடந்து செல்ல இயலாமல் சிமெண்ட் ரோடு போட்டு அந்த வயல் வெளிகளில் நடந்து சென்று இருக்கிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version