Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !!

EPS-OPS petition hearing today? Will the seal be removed?..AIADMK in agitation

EPS-OPS petition hearing today? Will the seal be removed?..AIADMK in agitation

இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !!

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வன்முறையில் இடுப்பட்டனர். மேலும் இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக காரணம்காட்டி அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

அதிமுக அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை ஐகோர்ட்டில் தனித் தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையில் பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி தங்களது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் முறையீடு செய்திருந்தார்.அதையடுத்து நீதிபதி அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு என்பதால் இதுதொடர்பாக தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் வாங்கி உரிய நடைமுறைகளை முடித்து வழக்கமான முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றார்.

பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று புதன்கிழமை மதியம்  2.15 மணிக்கு பிறப்பிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அதிமுக இரு தரப்பும் தீர்ப்புக்காக அமைதியான முறையில் காத்திருக்கிறார்கள். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றத்தில் போலீசார்  பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Exit mobile version