இன்றுடன் தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. இதனால் தமிழகம் முழுவதிலும் இன்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைவதால் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் பரபரப்பாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதோடு வேட்பு மனுவை தாக்கல் செய்த கையோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு எதிர்க்கட்சி ஆளும் கட்சியும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சரமாரியாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், எதிர்க்கட்சியான திமுக எவ்வளவுதான் அதிமுக மீது குற்றம் சுமத்தினாலும் திமுக சொல்லும் எதையும் அதிமுக தலைமை காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை.
இந்த நிலையில், நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் அவர் தன்னுடைய பிரச்சாரம் தொடர்பான உரையில் தெரிவித்திருப்பதாவது,என்னை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன அருகதை இருக்கிறது. நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவு போட்டிருந்தார். அந்த நேரத்தில் எதிர்கட்சியாக திமுகவினர் செய்த அட்டகாசங்கள் என்னவென்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். திமுகவின் ரவுடி கும்பலை அந்த சமயத்தில்தான் நான் சட்டசபைக்குள் பார்த்தேன் அந்த கட்சியில் இருக்கக்கூடிய எல்லோருமே ரவுடிகள் தான் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
புனிதமான சட்டசபையில் அமைச்சரின் மேஜை மீது ஏறி நின்று கொண்டு எதிர்க்கட்சியினர் நடனம் ஆடி இருக்கிறார்கள். புத்தகத்தை தூக்கி வீசியிருக்கிறார்கள். நீதிபதிக்கு சமமான சபாநாயகரை அவர் இருக்கையில் இருந்து கீழே தள்ளி அவரை அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டு இருப்பதை ஏற்றுக் கொள்ள இயலுமா? நாட்டின் மக்கள் நலன் கருதி சத்தம் ஏற்றக்கூடிய சட்டசபை என்ற புனிதமான இடத்தை களங்கம் செய்துவிட்டார்கள். அவர்கள் என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
எதிர்க்கட்சியினர் சட்டசபையில் ரவுடித்தனத்தை செய்துகொண்டிருக்கிறார்கள். நான் இந்த ஆட்சிக்கான பெரும்பான்மை நிரூபித்துக் காட்டிய சமயத்தில் சட்டையை கிழித்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியேறிவிட்டார். இவர்களைப் போன்றவர்கள் செய்த அராஜகத்தை தாண்டி நான் தமிழக அரசை வழி நடத்தி வருகின்றேன் என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களை வாரிசு என்று தெரிவிக்க கூடாது என சொல்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே உங்கள் கட்சியின் தலைவர் பதவியை பொருத்தவரையில் அந்தப் பதவிக்கு ஒரே குடும்பத்திலிருந்து அடுத்தடுத்து வருவதுதான் வாரிசு அரசியல். முதலில் கருணாநிதி அதன் பிறகு ஸ்டாலின் அதன்பிறகு உங்களுடைய மகன் உதயநிதி இதற்குப் பெயர்தான் வாரிசு அரசியல். இதைத்தான் நாங்கள் தடுக்க நினைக்கின்றோம் தமிழக மக்களும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
திமுக எனும் குண்டர்களின் கூடாரம்! முதல்வர் கொந்தளிப்பு!
