Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீர் மேலாண்மையில் முதலிடம்! முதலமைச்சர் பெருமிதம்!

திருப்பத்தூர் அதிமுகவின் வேட்பாளர் அழகுராஜ் அவர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நாட்டிலேயே ஜாதி மத மோதல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். நம்முடைய மாநிலம் மட்டும் தான் அமைதியாக இருந்து வருகிறது. அதே போல சட்டம் ஒழுங்கு சிறிதும் குறையாமல் இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.ஆனால் திமுக ஆட்சியில் இருந்த கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அதோடு கட்டப்பஞ்சாயத்து போன்றவையும் நடந்து வந்தது என்று தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அதோடு மக்கள் அனுதினமும் அமைதியின்றி தவிர்த்து வந்தார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்பது போன்ற ஒரு மனநிலையில்தான் தமிழக மக்கள் அந்த ஐந்து வருடத்தையும் கடந்து வந்தார்கள்.அதோடு கட்டப்பஞ்சாயத்து, தொடர் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போன்றவற்றால் தமிழக மக்கள் துன்புறுத்தப்பட்டனர் என்று தெரிவித்திருக்கிறார்.


முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததில் இருந்து தமிழகம் அமைதிப் பூங்காவாக நிலவிவருகிறது. எந்தவிதத்திலும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் எல்லை மீறாத வகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அந்த கட்சியை சார்ந்தவர்கள் உணவு விடுதிக்குச் சென்று வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு கடைக்காரர் பணம் கேட்டால் அவரை இழுத்துப் போட்டு அடித்து விடுகிறார்கள்.

ஆட்சி அதிகாரம் கையில் இல்லாத போதே அவர்கள் இவ்வாறு செய்கிறார்களே அவர்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றால் தமிழக மக்களின் நிலை என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருவேளை திமுக தப்பித்தவறி ஆட்சிக்கு வந்துவிட்டால் நிச்சயமாக தமிழக மக்கள் யாரும் சுயதொழில் செய்ய முடியாது.

உணவகங்கள் போன்றவற்றை நடத்த முடியாது அப்படி நடத்தினால் அது திமுகவிற்கு இலவசமாக சாப்பிடும் உணவகமாக மாறிவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.நான் தமிழகம் முழுவதிலும் சுற்றி வந்து விட்டேன் இந்த வருடம் நல்ல மழை பெய்து இருக்கிறது. தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நம்முடைய நாட்டிலேயே தமிழகம் தான் நீர் மேலாண்மையில் முதலிடத்தில் இருக்கிறது என்று மத்திய அரசு சான்றிதழ் கொடுத்திருக்கிறது என்று தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

Exit mobile version