Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்! முதல்வர் மகிழ்ச்சி!

அம்மா அரசின் சரியான நடைமுறையால் தமிழகம் இயல்பான நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கின்றார்.

எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் சம்பந்தமான ஆய்வு கூட்டத்தில் தெரிவித்ததாவது, அம்மாவின் அரசு வைரஸ் தொற்று பரவாமல் காப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்ததன் மூலமாக இன்று தமிழகம் முழுவதும் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து இருக்கின்றது.

உலகத்தையே ஆட்டி கொண்டிருக்கின்ற இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும், மற்றும் தமிழகத்திலும், பரவி இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

ஆனாலும் அம்மாவின் அரசு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுத்து விடுங்க விலையின் காரணமாக படிப்படியாக வைரஸ் தொற்று குறைந்து என்று இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றது.

முதல்கட்டமாக வேளாண்மை தொழிலுக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு, எந்த ஒரு தடையும் இன்றி வேளாண் பணிகளை மேற்கொள்ள அறிவிப்பு வழங்கி அதன் விளைவாக வேளாண் பெருமக்கள் முழுவீச்சில் அவர்களின் பணி மேற்கொண்டு இருக்கின்ற காரணத்தால், தமிழகத்தில் நல்ல விளைச்சலை பெற்றிருக்கின்றோம்.

தொழில் துறையைப் பொறுத்தவரையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றன.

இன்று 100 சதவீத தொழிலாளர்களை வைத்து தொழிற்சாலைகள் தங்களது வேலைகளை செய்யலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு அனேக தொழிற்சாலைகள், தங்களுடைய உற்பத்தியை தொடங்கியிருக்கின்றன.

முழுமையான அளவில், பணியாளர்களை வைத்து பல தொழில்களும் நடந்து வருகின்றனர். மொத்தத்தில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார் முதல்வர்.

Exit mobile version