Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூத்துக்குடியில் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட! புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தூத்துக்குடியில் ரூபாய் 16 கோடி மதிப்பீடு கட்டப்பட்டிருக்கின்றன புற்றுநோய் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டிலே கொரோனா பாதிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், மாவட்டம்தோறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றார்.

நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ,ஆய்வை மேற்கொண்ட தமிழக முதல்வர் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணி, மற்றும் வளர்ச்சி பணிகள், குறித்து ஆய்வு நடத்த இருக்கின்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 16 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இருக்கும் புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் வருகையின்போது திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அறிவிப்பின்படி, இப்போது அந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்து அதன் பின்னர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதேபோல 71.61 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கின்றன ஆராய்ச்சி மையத்தையும் முதல்வர் திறந்து வைத்திருக்கின்றார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் 328 கோடி மதிப்பில், 29 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் 22 கோடியில் முடிவடைந்த பணிகளையும் முதல்வர் துவங்கி வைக்க இருக்கின்றார்.

Exit mobile version