காவல்துறைவிடுத்த கடுமையான எச்சரிக்கை!

0
106

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது இந்த நிலையில், மாவட்டங்களுக்கு உள்ளே பயணம் செய்யவும், மாவட்டங்களை விட்டு வெளியே செல்வதற்கும், நேற்றுமுதல் இப்பதிவு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஆரம்பத்தில் சில தினங்கள் இருந்த ஒரு சில தளர்வுகள் தற்சமயம் முழுமையாக கைவிடப்பட்டு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வரும் 24ஆம் தேதி வரையிலும் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தருபவர்கள் இபதிவு செய்த பின்னர் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்சமயம் திருமணம் மற்றும் உறவினர்களின் சிறப்பு மருத்துவ சிகிச்சை முதியவர்களுக்கான சேவை போன்ற ஒரு சில தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும், பயணம் செய்வதற்கு இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இது நேற்று முதல் அமலுக்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இன்று முதல் சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்வதற்கு பதிவு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்பதிவு இல்லாமல் வெளியே சுற்றி திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.