நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் இபிஎஸ்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!   

0
180
erode-by-election-aiadmks-kutumi-is-in-the-hands-of-the-election-commission

நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் இபிஎஸ்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

தற்பொழுது ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக தங்களது வேட்பாளரை அறிமுகப்படுத்தாமலே உள்ளது. ஏனென்றால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்திருக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் யாருக்கு செல்லும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனது நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றார். இதனை ரத்து செய்யும் படியம் தற்பொழுது ஓ பன்னீர்செல்வம் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் தற்போது இடைத்தேர்தலில் நிற்பதில் சிக்கலாக உள்ளது.

எனவே தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் அதிமுக இடைச் செயலாளராக தேர்தல் ஆணையம் என்னை அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் அவர்கள் மூன்று நாட்களுக்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் கால அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் தற்பொழுது வழக்கு நடந்து வருவதால் அவரால் தேர்தலில் வேட்பாளரை நிற்க வைக்க முடியாமல் தவித்து வரும் நிலையில் இடைக்கால உத்தரவு மட்டுமே இந்த தேர்தலுக்காக அளிக்க முடியும் என திட்டவட்டமாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.