Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈரோடு – உர விற்பனை நிறுவனத்தில் வருமான வரி சோதனை; ரூ.4 கோடி பறிமுதல்!!

ஈரோடு மாவட்டத்தில் உர விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியதில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான ராயல் பெர்ட்டிலைசர் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சோமசுந்தரம் என்பவர். இவரது வீடு நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ளது.

இந்நிலையில், நிலம் வாங்கியதில், முறைகேட்டில் ஈடுபட்ட புகாரின் பேரில் இந்த நிறுவன உரிமையாளர் சோமசுந்தரத்தின் வீடு, அலுவலகத்தில் நேற்று இரவு கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட
வருமானவரித்துறை அதிகாரிகள் காலை வரை சோதனை நடத்தினர். விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பணமும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சோதனையின் முடிவில் கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version