ஈஷாவின் ‘தமிழ் தெம்பு’ திருவிழாவில் முதன்முறையாக அரங்கேறும் ‘ரேக்ளா ரேஸ்’!!
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது ‘ஈஷா யோகா மையம்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி தின விழாவானது மிக பிரம்மாண்டமாக நடைபெறும். ஆதியோகி முன்னிலை வகிக்கும் அந்த கொண்டாட்டத்தில் ஆன்மீகவாதிகள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக்கொள்வது வழக்கம்.இந்நிலையில், மஹா சிவராத்திரி கொண்டாட்டத்தை தொடர்ந்து அன்றிருந்து 9 நாட்கள் ‘தமிழ் தெம்பு’ திருவிழா நடைப்பெறும்.உலகளவில் மிக பழமையான ஆன்மீக தமிழ் கலாச்சாரத்தினை போற்றும் விதமாகவே இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு அம்சங்கள் நிறைந்த ‘தமிழ் தெம்பு’ திருவிழா
இந்த திருவிழாவில் அறிவியல், மருத்துவம், விளையாட்டு, தமிழர்களின் ஆன்மீகம், உள்ளிட்ட கண்காட்சிகள் தமிழக கலாச்சார அம்சங்களை கொண்டு நடத்தப்படுகிறது. பறையடி, கரகம், சலங்கையாட்டம், தேவராட்டம், தஞ்சாவூர் தவில் உள்ளிட்ட போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் தினமும் மாலை 6 மணிக்கு ஆதியோகி முன்னர் நடைபெறும்.அதோடு, நாட்டு மாட்டு சந்தை, பாரம்பரிய உணவு திருவிழா உள்ளிட்ட அம்சங்களும் நிறைந்திருக்கும். குதிரை சவாரி, ஒட்டக சவாரி, ராட்டினம் உள்ளிட்ட பொழுப்போக்கு அம்சங்களும் திருவிழாவில் இடம்பெற்றிருக்கும்.
இதனை தொடர்ந்து பெண்களுக்கான கோல போட்டி இன்று நடக்கிறது. 9442510429, 8248128349 உள்ளிட்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பெண்கள் இதில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நேற்று முதல் நாளை வரை நடக்கும் நாட்டு மாட்டு சந்தையிலும் இந்த தொலைபேசி எண்ணை அணுகி பங்கேற்கலாம்.இந்நிலையில், நாளை முதன்முறையாக இத்திருவிழாவில் ‘ரேக்ளா ரேஸ்’ நடத்தப்படவுள்ளது.மக்கள் இதனை காண மிக ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.