உங்கள் குழந்தைகளுக்கு எத்து பல் வராமல் தடுப்பது எப்படி? ஏன் எத்து பல் வருகிறது?

0
287

ethu pallu treatment in tamil: நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும் எத்து பல் (buck teeth). இதனை நாம் ஆரமப்பத்திலே சரி செய்யாவிட்டால் பிறகு பற்களில் கிளிப் போட்டு தான் சரி செய்வதாகிவிடும். இந்த எத்து பல் என்பது உதடுகள் எப்பதும் மேல் நோக்கியவாறு தூக்கிக்கொண்டே இருக்கும். இவர்களால் உதட்டை சாதரணமாக வைத்திருக்க முடியாது. பற்களை மூடுவதற்கு மிகுந்த சிரமப்படுவார்கள்.

நாம் இந்த பதிவில் எத்து பல் வருவதற்கான காரணம், வராமல் தடுப்பது எப்படி என்பதை (thethu pal treatment in tamil) பார்க்கலாம்.

எத்து பல் வர காரணம்

இந்த எத்து பல் பிரச்சனை வருவதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் இது அவர்களின் மரபணுவால் வரலாம். ஒருவருக்கு எத்து பல் வருகிறது என்றால் அவர்களின் குடும்பத்தில் யாருக்காது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா யாருக்காவது எத்து பல் இருந்தால் இது அவர்களின் குழந்தைகளுக்கும் வரும்.

மேலும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் விரல் சூப்புவார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு அந்த பழக்கம் மாறாமல் பள்ளி படிக்கும் வயது வரை விரல் சூப்புவார்கள். இதனால் இவர்களுக்கு முன் பற்கள் உதட்டை விட்டு நீண்டு காணப்படும்.

மேலும் விரல் சூப்பும் பழக்கத்தை மறைக்க ஒரு சில குழந்தைகள் முன் பற்களை எப்போதும் நாக்கால் எத்திக்கொண்டே இருப்பார்கள். இது இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் பற்கள் விழுந்து முளைத்த பிறகும் இவர்கள் இவ்வாறு செய்துக்கொண்டே இருந்தால் எத்து பல் வரும்.

மேலும் ஒரு சிலருக்கு கோபம் வந்துவிட்டால் பற்களை கடித்துக்கொண்டு கோப படுவார்கள். இவ்வாறு இவர்கள் தொடர்ந்து கோபப்பட்டு பற்களை கடித்துக்கொண்டால் எத்து பல் வரும்.

குழந்தைகளோ, பெரியவர்களோ படித்துக்கொண்டிருக்கும் போதும், அல்லது ஓவியம் வரையும் போதோ அவர்கள் பென்சிலை முன் பற்களில் பல்லில் வைத்து கடித்துக்கொண்டே இருப்பார்கள் அவ்வாறு செய்யும் போது எத்து பற்கள் உருவாகலாம்.

குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ மூக்கடைப்பு ஏற்பட்டால் வாய் வழியாக சுவாசிச்கும் போது எத்து பற்கள் வரும்.

தடுப்பது

மேல் கூறிய எதையும் உங்கள் குழந்தைகள் செய்யாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். விரல் சூப்புவது, நாக்கால் பற்களை எத்துதல் போன்றவற்றை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் பற்கள் துலக்கிய பிறகு விரல் வைத்து மெதுவாக அமுக்கி பற்களை துலக்க வேண்டும். இவ்வாறு நாள் தோறும் விரல் வைத்து அழுத்தி விலக்க பற்கள் எத்திக்கொண்டு வருவது தடுக்க முடியும். அவ்வாறு துலக்கும் போது பல் ஈறுகளையும் அழுத்தி விட வேண்டும்.

பற்களை அடிக்கடி கடித்துக்கொண்டு உள்ளார்களா? என்று பார்த்து அவ்வாறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுவயது முதலே சற்று பற்களுக்கு கடிக்க கூடிய அளவிற்கான கடினமான பொருட்களை கடிக்க கொடுங்கள். உதாரணமாக கரும்பு, போன்றவற்றை கடித்து பழக்கப்படுத்தி வந்தார்கள் என்றால் வளர்ந்த பிறகு பற்கள் கடினமான பொருட்களை கடிக்கும் போது எத்திக்கொண்டு வரலாம்.

மேலும் படிக்க: உங்களுக்கு கருநாக்கு உள்ளதா? மறந்தும் இந்த நாளில் இதை கூறிவிடாதீர்கள்..!!