திருப்பூர்: நேற்று முதல் தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் இந்த இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டவில்லை. அதற்க்கு காரணம் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெறுவதால் இந்த பொங்கல் தொகுப்பு வழக்படவில்லை. மேலும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்க மேல் இடத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் இடங்களில் அதற்கான கூட்டம் இல்லாமல் காலியாக இருந்து வருகிறது. எனில் பொது மக்கள் இந்த வருடம் பணத்துடன் பொங்கல் பரிசு தொகை கிடைக்கும் என எதிர் பார்த்த நிலையில் பெரும் அதிர்ச்சியான பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அதற்க்கு காரணம் பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு என இவை மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் பணம் இடம் பெற வில்லை.
அதற்க்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது அதில் தற்போது புயல் பாதிப்பிற்கு தமிழக அரசின் நிதியில் இருந்து பணம் எடுக்கப்பட்டது. அதனால் தற்போது நிதி நெருக்கடியில் உள்ளத்தால் பணம் வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது என குறிப்பிடபட்டு இருந்தது. திருப்பூர் கேவிஆர் நகர் ரேஷன் கடையில் மக்கள் பொங்கல் தொகுப்பு வாங்க வந்திருந்தனர். அங்கு வந்த மாநகராட்சி கவுன்சிலர் திருப்பதியை முற்றுகையிட்ட மக்கள் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என கேட்டனர்.
மேலும் இந்த கடையில் வழங்கப்பட்ட அரிசியில் புழுக்கள் மற்றும் வண்டுகள் இருந்தனர். இங்கு வாங்கிய அரிசியில் பொங்கல் வைத்தால் நாய் கூட திங்காது என பொது மக்கள் கூறினார். மேலும் இந்த புழுக்கள் மற்றும் வண்டுகள் நிறைந்த அரிசியை வாங்க நாங்கள் ஒரு நாள் விடுமுறை பெற்று வாங்க வந்துள்ளோம் என குற்றம் சாட்டினர்.