அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற காங்கிரஸ் போராட்டத்தில் குறித்தனர். அதே நேரம் காங்கிரஸ் தான் அம்பேத்கரை அவமதித்தது என்று கூறி பாரதிய ஜனதா கட்சியின் போராட்டத்தை ஆரம்பித்தது. எம்பிக்கள் பார்லி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நேற்று போராட்டத்தை தொடர்ந்தது பாரதிய ஜனதா எம்பிகளும் காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட பாரதிய ஜனதா எம்பி பிரதாப் சந்திர சாரங்கி மண்டையை உடைத்ததது.
மற்றொரு காங்கிரஸ் எம்பி காயமடைந்தார். ராகுல் தள்ளிவிட்டதில் தான் தனது மண்டை உடைந்தது என பாரதிய ஜனதா எம்பி கூறினார். அதே நேரம் பாரதிய ஜனதா எம்பிக்கள் தள்ளிவிட்டது தான் முழங்காலில் அடிபட்டதாக காங்கிரஸ் எம்பி கூறினார். பாரதிய ஜனதாவினர் கொடுத்த புகாரின் பேரில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் புகார் விசாரணையில் உள்ளது. நேற்று நடந்த கலவரம் எதிரொலியாக பார்லிமென்ட் எந்த வாசல் பகுதிகளும் இனி போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று சபாநாயகர் அதிரடியாக உத்தரவிட்டார்.
இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் மூன்றாவது நாளாக இன்றும் டெல்லியில் போராட்டம் நடத்தினர். பாரதிய ஜனதா தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி எம்பிகள் பார்வை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அம்பேத்கரை காங்கிரஸ் இழிவு படுத்தியதாக கோஷமிட்டனர். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.