Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சொத்து எழுதி கொடுத்தாலும் அதை ரத்து பண்ணலாம்!! எப்படி தெரியுமா??

#image_title

சொத்து எழுதி கொடுத்தாலும் அதை ரத்து பண்ணலாம்!! எப்படி தெரியுமா??

இக்காலகட்டத்தில் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து அவர்களுக்கு தேவையான சொத்துக்களை சேர்த்து வைத்து நல்ல சொகுசாக வாழ கற்று கொடுத்து விடுகிறார்கள். இதனால் பிள்ளைகள் சொகுசாக வாழ பழகுகிறார்கள். அதன் பின்னர் பெற்றோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுத்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் கொடுத்ததும் பிள்ளைகள் அவர்களை மதிப்பதில்லை மற்றும் பெற்றோர்களை கண்டு கொள்வதும் இல்லை. இது போன்ற நிகழ்வுகளை நாம் அன்றாட வாழ்வில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இது போன்ற பெற்றோர்களை தவிக்க விடும் பிள்ளைகளுக்கு தற்போது ஒரு சட்டம் வந்துள்ளது. இதுபோன்ற ஆதரவற்று இருக்கும் முதியவர்களுக்கு  உதவி செய்யும் ஹெல்ப் லைன் தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் போன்று யாரையும் சாலையிலோ எங்காவது சந்தித்தீர்கள் என்றால் 14567 என்ற எண்ணுக்கு அழைத்து அவர்கள் பற்றிய தகவலை கொடுத்தால் போதும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இது மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து சமூக நலத்துறை என்ற தனி பிரிவு கீழ்  ஹெல்ப் லைன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த ஹெல்ப் லைன் மூலம் 4 சேவைகள் செய்து தரப்படுகிறது

1. தகவல் தொடர்பு

முதியவர்கள் இல்லம் பற்றிய தகவல்கள் மற்றும் முதியவர்களை பராமரிக்கும் பணியாளர்கள் பற்றிய தகவல்கள் இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

2. வழிகாட்டுதல்

இதன் மூலம் முதியவர்களுக்கு அரசியல் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் எப்படி வாங்குவது போன்ற  உதவிகள்  செய்து தரப்படுகிறது. மேலும் முதியவர்களை பெற்ற பிள்ளைகள் கண்டுகொள்ளாமல் விட்டால் அதற்கு தேவையான சட்ட ஆலோசனையும் தரப்படுகிறது. மேலும் தமிழக அரசால் பிறப்பித்த பராமரிப்பு சட்டத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் வாங்கித் தரப்படுகிறது.

3. தல மனநல ஆலோசனை

தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் ஆலோசனைகளும் இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

4. கல அளவில் ஆதரவு

முதியவர்களை அடித்து துன்புறுத்துவது, அவர்களை வீட்டை விட்டு துரத்துவது, அவர்களை வார்த்தையால் எரிப்பது போன்றவைகளை செய்யும் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்று பல சேவைகளை இந்த ஹெல்ப் லைன் செய்து வருகிறது மேலும் சாலையோரம் முதியவர்களை பார்த்தீர்கள் என்றால் 14567 என்ற எண்ணிற்கு அழைத்து அவர்கள் பற்றிய தகவலை கொடுத்தால் போதும். அந்த ஹெல்ப் லைனில்  முதியவர்களை அழைத்து அவர் குடும்ப விவரம் மற்றும் அவர் விருப்பத்தை கேட்டறிந்து அவர்களை முதியோர்  இல்லத்திலும் சேர்த்து விடப்படுவார்கள். மேலும் பிள்ளைகள்  சொத்தை வாங்கிக் கொண்டு பெற்றவர்களை சாலையில் விட்டால்  அதற்கான சட்டமும் உள்ளது. அதில் பெற்றோர்களை பார்த்து கொள்ளாத பிள்ளைகளுக்கு எழுதி தரப்பட்ட சொத்துக்கள் பெற்றோர்கள் ரத்து செய்யலாம் இதுவே அந்த சட்டமாகும்.

Exit mobile version