Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் இனிமேல் இது தெரியும்! சுற்றுச்சூழல் அமைச்சரின் புதிய திட்டம்! 

#image_title

நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் இனிமேல் இது தெரியும்! சுற்றுச்சூழல் அமைச்சரின் புதிய திட்டம்! 

தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. தமிழ்நாட்டில் பல தானங்களை வழங்கினாலும், முதலமைச்சர் அறிவுறுத்தலின் அடிப்படையில் 2 கோடி 82 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். மேலும் பசுமை தமிழகம்  திட்டத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அப்பகுதியை பசுமையாக மாற்றி இருப்பதாகவும், பள்ளி கல்வி துறை அமைச்சர் பசுமை பள்ளிகளையும் உருவாக்கி தந்தும் இருக்கிறார் என்றார்.

உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 70 லட்சம் மரங்களுக்கு  275 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதே போன்று உணவுத் துறை அமைச்சர், சபாநாயகர் பனை விதைகளை வழங்கியுள்ளார்.  இது போன்று மரம் வளர்ப்பதில் முன்னோடியாக இருக்கிறார்கள்.  பூமிக்கு மனதார மரங்களை தானமாக கொடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

நாமெக்கெல்லாம் மூத்த மொழியான தமிழை சிறப்பிக்கும் வகையில் முத்தாய்ப்பாக நிலவில் இருந்து பார்த்தாலும் நிலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version