Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காட்டுக்குள் இருக்க சொன்னாலும் நான் இருப்பேன்!! ஒரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்கு போகமாட்டேன்!!! நடிகை ரேகா நாயர் பேட்டி!!!

#image_title

காட்டுக்குள் இருக்க சொன்னாலும் நான் இருப்பேன்!! ஒரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்கு போகமாட்டேன்!!! நடிகை ரேகா நாயர் பேட்டி!!!

என்னை காட்டுக்குள் சென்று இருக்க சொன்னாலும் நான் போய் இருப்பேன். ஆனால் ஒரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்னு பிக்பாஸ் குறித்த கேள்விக்கு நடிகை ரேகா நாயர் பதில் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கூடிய விரைவில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. தற்பொழுது வரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் முடிந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக புரோமோவில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்தார். இதையடுத்து பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் பரவி வருகின்றது அந்த வகையில் நடிகை ரோஷ்னி, பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் ரித்திகா, மாகாபா ஆனந்த், மௌனராகம் 2 பிரபலம் ரவீனா தாஹா, நடிகர் பப்ளு பிருத்திவிராஜ், நடிகை தர்ஷா குப்தா, குக்வித் கோமாளி பிரபலம் நவீனா, நடிகை ஷகிலா அவர்களின் மகள் மிலா மற்றும் பலருடைய பெயர்கள் பேசப்பட்டு வருகின்றது. இதில் நடிகை ஷகிலா அவர்கள் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை ரேகா நாயர் அவர்களும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வார் என்று பரவலாக பேசப்பட்டா வந்த நிலையில் நடிகை ரேகா நாயர் அவர்கள் அதற்கு பதில் கொடுத்துள்ளார்.

இது குறித்து நடிகை ரேகா நாயர் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை ரேகா நாயர் “என்னை காட்டுக்குள் சென்று இருக்க சொன்னாலும் நான் போய் இருப்பேன். ஆனால் ஒரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன். இப்படி 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் சென்று இருப்பதற்கு பதிலாக 100 மரங்கள் நடலாம்.

கடந்த மூன்று பிக்பாஸ் சீசன்ஙளிலும் நான் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எனக்கு துளி கூட ஆர்வம் கிடையாது” என்று நடிகை ரேகா நாயர் அவர்கள் கூறியுள்ளார்.

 

Exit mobile version