80 வயதில் நடக்க முடியாமல் தடுமாறும் நபர்களும் இந்த பாலை குடித்தால் எழுந்து ஓடுவார்கள்!!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் சோர்வு,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு,எலும்பு தேய்மானம் போன்ற காரணங்களால் நிற்க கூட தெம்பு இல்லாமல் பெரும் அவதியடைந்து அடைந்து வருகின்றனர்.
உடல் எலும்புகள் வலுவாக இருந்தால் முதுமை காலத்திலும் உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.எனவே உடல் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள மற்றும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க இந்த பாலை தயார் செய்து குடியுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பால்
2)கசகசா
3)பனங்கற்கண்டு
4)உலர்ந்த கொப்பறை தேங்காய் துண்டுகள்
5)கருப்பு உளுந்து
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1 தேக்கரண்டி கருப்பு உளுந்து சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த உளுந்து பருப்பை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.பிறகு அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி கசகசா போட்டு லேசாக வறுத்து அடுப்பை அணைக்கவும்.
முதலில் வறுத்த உளுந்து பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடு படுத்தவும்.பின்னர் அதில் அரைத்த உளுந்து பொடி,வறுத்த கசகசா மற்றும் உலர்ந்த கொப்பறை தேங்காய் துண்டுகளை போட்டு குறைவான தீயில் 5 நிமிடங்களுக்கு காய்ச்சவும்.
அதன் பின்னர் இந்த பாலை ஒரு கிளாஸுக்கு ஊற்றி ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்கவும்.இந்த பாலை வாரத்தில் இரு முறை காலை நேரத்தில் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் கிடைக்கும்.
எலும்பு வலிமை அதிகரிக்கும்.இந்த பால் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.