Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலைக் கண்ணீர் விடும் ஸ்டாலின்! அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் தாக்கு!

ஸ்டாலின் எம்ஜிஆரை முறை முறையை வைத்து கூப்பிட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் என்று கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கின்ற காரணத்தால், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமடைய செய்து இருக்கிறார்கள் இதன்காரணமாக தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் கடுமையாக சாடி கொள்வதும், விமர்சனங்கள் செய்து கொள்வதும், நடந்து வருகிறது. இந்த நிலையில் மதுரை கோவில் பாப்பாகுடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் நெருங்கிவரும் காரணத்தால், பொன்மனச்செம்மல் எம்ஜிஆரை உறவுமுறை வைத்து ஸ்டாலின் கூப்பிட்டாலும் கூட ஸ்டாலின் எம் ஜி ஆர் தான் தன்னை அரசியலில் வர தூண்டினார் என்று தெரிவித்தாலும் அவரின் மாயை எதுவும் தமிழகத்தில் பலிக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.

முரசொலி பத்திரிகையில் எம்ஜிஆர் வாங்காத கப்பலை வாங்கியதாக திரித்து எழுதியவர்கள் தான் திமுகவினர். எம்ஜிஆரை அந்த கட்சியின் தலைவர் கருணாநிதி அசிங்கப்படுத்தி பேசியபோது அவர் சித்தப்பா என்று ஸ்டாலினுக்கு தெரியவில்லையா? அவரை கட்சியை விட்டு கலைஞர் நீக்கும்போது சித்தப்பாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டாம் என்று ஸ்டாலின் தெரிவித்து இருக்கலாமே. அவ்வாறு செய்யாமல் இருந்ததற்கு காரணம் என்ன இப்போது தேர்தல் நெருங்கிவரும் காரணத்தால் பெரியப்பா சித்தப்பா என்று தெரிவிக்கிறார் பெரியப்பா சித்தப்பா என்று ஸ்டாலின் உணர்ச்சிகளை புகழ் பாடினாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று மக்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

Exit mobile version