அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் – சுவையாக செய்வது எப்படி?

0
85
#image_title

அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் – சுவையாக செய்வது எப்படி?

நம்மில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கில் தயாரிக்கப்பட்ட உணவு என்றால் அலாதி பிரியம்.கிட்டத்தட்ட சிக்கன் சுவையை ஒத்திருக்கும் உருளைக்கிழங்கை வைத்து சுவையான ரோஸ்ட் செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்:-

*உருளைக்கிழங்கு – 4

*பெரிய வெங்காயம் – 1

*பூண்டு – 10 பற்கள்

*மஞ்சள் துள் – 1

*பொட்டுக்கடலை – 1 கப்

*பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி

*வரமிளகாய் – 8

*உப்பு – தேவையான அளவு

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:-

முதலில் 4 உருளைக்கிழங்கு எடுத்து அதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதேபோல் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் தோல் நீக்கி பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து 10 பூண்டு பற்கள் சேர்த்து வறுத்து கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 8 வர மிளகாய் சேர்த்து லேசாக அரைத்து எடுத்து எடுத்து கொள்ள வேண்டும்.பின்னர் அதில் தேவையான அளவு உப்பு ,ஒரு தேக்கரண்டி சீரகம்,1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் மற்றும் ஒரு கப் பொட்டுக்கடலை,சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் வறுத்து வைத்துள்ள பூண்டு பற்கள் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மைய்ய அரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள உருளை கிழங்கு + வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின்னர் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறவும்.பின்னர் கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைக்கவும்.