Annamalai BJP: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் சார்ந்த படிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளதால் கட்சி நிர்வாக பணிகளை தற்காலிகமாக கவனிப்பதற்காக புதிய தலைவரை நியமிக்க உள்ளனர்.
பாஜக கட்சியின் தலைவர் பதவியை தவிர அதாவது அண்ணாமலை அவர்களின் தலைவர் பதவியை தவிர கட்சியின் மற்ற அனைத்து நிர்வாகிகளின் பதவியும் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நிர்வாகிகளுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாஜக கட்சியில் நியமிக்கப்படும் பதவிகள் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். காலாவதியான பின்னர் அந்தந்த பதவிகளுக்கு நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள். அல்லது ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகளுக்கு பதிலாக வேறு நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள். அந்த வகையில் தற்பொழுது அண்ணாமலை அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதாவது காலாவதியாகும் பதவிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக பாஜக கட்சியில் புதிதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக பாஜக கட்சியில் ஏற்கனவே 50 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்களாம். ஏனவே மேலும் 50 லட்சம் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தேவையான அனைத்து வேலைகளையும் தொடங்குமாறு அனைத்து நிர்வாகிகளுக்கும் அண்ணாமலை அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட பின்னர் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் சேர்க்கப்படுவார்கள் என்று பாஜக கட்சியின் மாநிலத் தரப்பிலிருந்து கூறப்படுகின்றது. அண்ணாமலை அவர்கள் அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்லவுள்ள நிலையில் பாஜக கட்சியின் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் சர்வதேச அரசியல் தொடர்பான சான்றிதழுடன் கூடிய மேற்படிப்பை படிப்பதற்காக அடுத்த மாதம் லண்டன் செல்லவுள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் 4 முதல் 5 மாதங்கள் வரை தங்கி இருந்து சர்வதேச அரசியல் என்ற சான்றிதழ் படிப்பை படிக்கவுள்ளார். இந்தியாவில் இருந்து 12 தலைவர்களை தேர்வு செய்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் இந்த படிப்பை கற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கும். அந்த வகையில் இந்த முறை பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து அண்ணாமலை அவர்கள் வெளிநாடு செல்லவுள்ள நிலையில் 5 மாதங்கள் கட்சியை நடத்தப் பொது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து தற்காலிகமாக கட்சிக்கு தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
அண்ணாமலை அவர்கள் வெளிநாடு செல்வதால் அவருடைய தலைவர் பதவிக்கு தற்காலிக தலைவர் நியமிக்கப்படலாம் அல்லது தலைவர் பதவியில் இருந்தே அண்ணாமலை அவர்கள் மாற்றப்படலாம் என்னும் கூறப்படுகின்றது.
அண்ணாமலை அவர்கள் வெளிநாடு சென்றுவிட்டால் கட்சியை நடத்த தலைவர் வேண்டும். வழிகாட்ட தலைவர் இல்லாமல் மூன்று மாதம் கட்சியை நடத்த முடியாது. எனவே அண்ணாமலைக்கு பதிலாக தற்காலிக தலைவரை நியமிக்க வேண்டும் என்று டெல்லி ஆலோசனை செய்து வருகின்றது.
இதையடுத்து அண்ணாமலை பதவி பறிக்கப்படுமா? வெளிநாடு செல்வது ஏன்? பாஜக அமைதியாக இருப்பது எதற்காக என்பது குறித்து அரசியல் நிபுணர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இத குறித்து பாஜக தரப்பினர் “டெல்லிக்கு பாஜக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் மீது நன்மதிப்பும் நம்பிக்கையும் இருக்கின்றது.
அந்த மூத்த நிர்வாகி பெயர்தான் தலைவர் பதவிக்கு அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. இருந்தாலும் தற்போதைய தலைவர் அண்ணாமலை அவர்களை தலைவர் பதவியில் இருந்து மாற்ற விருப்பம் இல்லாமல் டெல்லி இருக்கின்றது.
ஏனென்றால் தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்த்தவர் அண்ணாமலை அவர்கள் தான். ஒற்றை இலக்கத்தில் இருந்த வாக்கு வங்கியை இரட்டை இலக்கத்திற்கு அண்ணாமலை அவர்கள் கொண்டு வந்துள்ளார். எனவே டெல்லி அண்ணாமலை மீது நன்மதிப்பும் நம்பிக்கையும் கொண்டுள்ளது. இருப்பினும் டெல்லிக்கு அண்ணாமலை மீது சிறிய அதிருப்தி இருக்கின்றது. அது என்னவென்றால் அவர் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதில் தான் டெல்லிக்கு அதிருப்தி உள்ளது. பொறுத்திருத்து பார்க்கலாம் புதிய தலைவர் யார் புதிய நிர்வாகிகள் யார் என்று.