முதலமைச்சர் இதை செய்யத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்! சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

0
97

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி 75 ஆண்டுகள் பின்னோக்கிப் போய் விடும் என்று நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான குரு மிகத் தெளிவாக கூறி இருக்கிறது. இதனால் தான் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள் என்று நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கூறியிருக்கிறது. இதன்காரணமாக, கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை மிகத்தெளிவாக அந்த குழு கூறியிருக்கிறது.

அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மருத்துவம் படிக்க சேர்க்கை விகிதம் குறைவு இதன் காரணமாக, இதற்கு பல காரணங்களை உதாரணமாக சொல்ல முடியும். அந்த சதவீதத்தை கூடுதலாக மாற்றவே முதலமைச்சர் சமீபத்தில் சட்டசபையில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற திட்டத்தை அறிவித்து தொழிற் கல்வி பயில இருக்கின்ற மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கி இருக்கின்றார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி பொறியியல் மீன்வளம் சட்டம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு வழங்கியிருக்கிறார் முதலமைச்சர். இதன் மூலமாக அரசு பள்ளி மாணவர்கள் ஒரு உத்வேகத்தை பெற்றிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கை காரணமாக, எதிர்வரும் காலத்தில் அரசுப்பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு மிகப்பெரிய சிபாரிசுகள் எதுவும் தேவை என்ற நிலை ஏற்பட இருக்கிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது, அந்த சட்ட முன்வடிவு ஆளுநரிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் எங்களுடைய சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். இதன் பின்னர் அடுத்தடுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படும், தமிழக மாணவர்களின் மனநிலையை கருத்தில் வைத்து நீதிபதியின் சட்ட முன்வடிவை படித்துப் பார்க்கும் போது குடியரசுத் தலைவர் நிச்சயமாக இதற்கு ஒப்புதல் வழங்குவார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.