Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எல்லாமே அம்மா தான்.. தெரியாமலேயே அட்ஜஸ்ட்மென்ட் ஓகே சொல்லிட்டேன்! பிரபல சீரியல் நடிகையின் குமுறல்!!

Everything is mom.. I said adjustment ok without knowing! Famous serial actress's tumult!!

Everything is mom.. I said adjustment ok without knowing! Famous serial actress's tumult!! Everything is mom.. I said adjustment ok without knowing! Famous serial actress's tumult!!

எல்லாமே அம்மா தான்.. தெரியாமலேயே அட்ஜஸ்ட்மென்ட் ஓகே சொல்லிட்டேன்! பிரபல சீரியல் நடிகையின் குமுறல்!!

விஜய் டிவியின் பிரபலமான சீரியல் ஆன செந்தூரப்பூவே என்ற தொடரில் மூலம் அறிமுகமானவர்தான் ஸ்ரீநிதி மேனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆரம்பகட்ட காலத்தில் இருந்தே வாய்ப்புக்காக பல இன்னல்களை சந்தித்து தற்பொழுது அனைவரும் அதிகம் அளவிற்கு முன்னேறி வந்துள்ளார்.

அவர் வந்தவர் பல சிக்கல்களை கடந்தது குறித்து பேட்டி அளித்தது அனைவருக்கும் மனதை வருடியுள்ளது. சினிமா மற்றும் சீரியல் என்றாலே ஹாலிவுட் முதல் டோலிவுட் வரை அட்ஜஸ்மென்ட் என்ற பெயர் தற்பொழுதும் இருப்பது ஒன்றுதான்.

அந்த வகையில், இவர் பட்ட இன்னல்கள் பற்றி தெரிவித்துள்ளார். அதில், நான் சினிமா வாய்ப்பு தேடி பல பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவித்ததோடு தற்பொழுது பலவற்றை எதிர் கொண்டு தான் வருகிறேன்.

நான் இந்த இடத்திற்கு வருவதற்கு என் அம்மா தான் காரணம். எனக்கு நடந்த இன்னல்களை நினைத்தால் படப்பிடிப்பின் காட்சியில் கிளிசரின் இல்லாமலேயே கண்ணீர் வரும். நான் திரையுலகுக்கு வந்த போது அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் எனக் கூறுவர். அதைப்பற்றி முழுவதும் அறியாமல் சாப்பாடு அல்லது தங்கும் இடத்தில் ஏதேனும் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும் என்று நினைத்து உடனே ஒப்புக்கொண்டு விட்டேன்.

நாளடைவில் தான் தெரிகிறது அவர்கள் எதற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என்று, அது தற்பொழுதும் எனக்கு வருத்தம் அளிக்கிறது. பலரும் என்னை நான் அணியும் ஆடை பார்த்து விட்டு எதையும் காட்ட மாட்டேன்றீங்க என்று விமர்சனம் செய்வர். அதனை எல்லாம் நான் சிரித்துக் கொண்டேன் கலந்து விடுவேன்.

எனது சமூக வலைத்தளத்தில் வரும் கமெண்டுகள் அனைத்தையும் எனது அம்மா தான் பார்த்து வருத்தம் அடைவார். நான் எப்பொழுதும் கிளாமரான ஆடைகளை அணிய மாட்டேன். அதுபோல நாம் வாய்ப்புக்காக ஒரு முறை அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டால் அதுவே நாளடைவில் பெரிய சிக்கலாக மாறிவிடும். அது மட்டும் இன்றி அது நமக்கு மிகப்பெரிய கெட்ட பெயராகவும் மாறிவிடம்.

நமக்கான வாய்ப்பு எப்பொழுது இருந்தாலும் நம்மை தேடி வரும் ஒரு முறை ஓகே சொல்லி ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி விட்டால் அவ்வளவுதான் என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார். நெட்டிசன்கள் இவர் அளித்த பேட்டிக்கு பாராட்டுக்கள் அளித்து வருகின்றனர்.

Exit mobile version