Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சந்திராயன் 2 விண்கலம் குறித்து மதுரையை சேர்ந்த விஞ்ஞானியின் ஆதாரம்!!

நிலவினை ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 1, 2008 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட 2009 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.ஆனால் சந்திராயன்1 பத்து மாதமே செயல்பட்டு அதன் செயல் இழந்தது.
2019ஆம் ஆண்டு சந்திராயன்-2 ஜிஎஸ்எல்வி ராக்கெடின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.ஆனால் விக்ரம் லெட்டர் மற்றும் ரோவர் கருவிகள் சேதம் அடைந்ததாகவும் லேண்டர் தனித்தனியாக உடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணி என்பவர் விக்ரம் லேண்டர் உடையவில்லை என கருத்து தெரிவித்தார் .இதற்கான ஆதாரமாக புகைப்படத்தை இஸ்ரோவிடம் சமர்ப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் ஆய்வின் முடிவில் விக்ரம் லேண்டர் குறித்து குறிப்பிடப்பட்டது. தற்போது, பிரக்யான் ரோவர் செயல்பட்டதற்கான ஆதாரத்தை நாசா புகைப்படத்தினை கொண்டு மேற்கோள்காட்டி சண்முக சுப்ரமணியன் சந்திராயன் 2 விக்ரம் லேண்டர் குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சண்முக சுப்ரமணி கூறுகையில், நிலவின் மேற்பரப்பிலிருந்து 2 மீட்டர் ஆழத்தில் விக்ரம் லேண்டர் விழுந்து கிடப்பதாகவும், ரோவர் கருவி அங்கிருந்து சில மீட்டர் தொலைவில் காணப்படுவதாகவும் கூறினார். விக்ரம் லேண்டருக்கு பிறப்பித்த உத்தரவின்படியே ரோவர் கருவி செயல்பட்டிருக்கலாம் என்பது சண்முக சுப்ரமணியின் கருத்தாக இருப்பதாக கூறினார்.சண்முக சுப்பிரமணியத்தின் ஆய்வினை நாசாவிடம் கேட்டபோது, எந்த பதிலும் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.மேலும், இதனை உறுதிப்படுத்தப்பட்டால், சந்திரயான்-2 திட்டத்தில் இது முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version