ADMK: முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி கலந்து கொண்டது தான் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக உள்ளது. எஸ் பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இவருக்கிடையில் சசிகலா மற்றும் தினகரன் உள்ளிலுக்கும் பேச்சுவார்த்தையானது சமீபகாலமாகவே தொடர்ந்து வருகிறது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துப் போகாததால் இருவரும் முரண்பட்டு இருந்தனர்.
இதன் காரணமாகவே வேலுமணி மகனின் இல்லத் திருமண நாளன்று எடப்பாடி கலந்து கொள்ளவில்லை. மாறாக அவரது மகன் மற்றும் மனைவி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இது பெருமளவில் பரபரப்பாக பேசப்பட்டதால் கட்சியின் சீனியர் சிட்டிசன்கள் எடப்பாடிக்கு அறிவுரை கூறியுள்ளனர். உட்கட்சி மோதல் எதையும் நீங்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டாம். இது எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமைந்து விடும் என்று தெரிவித்துள்ளனர்.
அதன் வெளிப்பாடாக எடப்பாடி பழனிச்சாமி எஸ் பி வேலுமணி இல்ல திருமண விழாவுடைய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இது ஒரு புறம் இருக்க செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி போர் தற்பொழுது வரை முடிந்த பாடில்லை. இவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு எடப்பாடி வருவதற்கு முன்னதாகவே காத்திருக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் அதிமுகவில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதிமுகவில் மாஜி அமைச்சர்கள் எடப்பாடிக்கு எதிராக முரண்பட்டு இருப்பது கட்சி நிலை குலைவதை அப்பட்டமாக காட்டுகிறது.