முன்னாள் எம்எல்ஏ மகன் விபத்தில் மரணம்

0
169
Ex MLA Son Died In Accident

முன்னாள் எம்எல்ஏ மகன் விபத்தில் மரணம்

ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று பிறகு திமுக ஆதரவாளராக மாறினார்.

இந்த தேர்தலில் அவர் பாமகவின் சார்பாக போட்டியிட்ட மாவீரன் குரு என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட காடுவெட்டி ஜே குரு அவர்களை எதிர்த்து போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதது.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் அவர்களின் சொந்த ஊர் மீன்சுருட்டி அருகே உள்ள ராம தேவநல்லூர். இவரது மகன் ராஜ்கமல் குடும்பப் பணிகளைப் கவனித்து வந்துள்ளார்.இவர்களுக்குச் சொந்தமான பண்ணை வீடு, ஊருக்கு அருகில் உள்ளது.

அடிக்கடி இவர் அந்த பண்ணை வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு அந்தப் பண்ணை வீட்டிற்குக் காரில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் போது, அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் ராஜ்கமல் பலத்த காயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.