தொடரும் முதல்வர் வேட்பாளர் குறித்தான சர்ச்சை ! அதிமுக தலைமை என்னதான் செய்ய போகிறது !?

0
134

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சார்பாக யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என ஆலோசனை நடத்தி வருகின்றது. திமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்ற நிலையில் அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.காரணம் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறி வந்தனர்.அதே நேரம் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் தேர்தல் முடிந்த பிறகுதான் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவார்கள் மேலும் கட்சி தலைமை கழக நிர்வாகிகள் இதுபற்றி அறிவிப்பார்கள் என்று கூறி வந்தனர்

இதனையடுத்து அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே ! தொடர்ந்து 3-ஆவது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள் என்று பதிவிட்டிருந்தார்.

இதன் பின் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அவருடை தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.இது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை
ஏற்படுத்தியது.
தொடர்ந்து இது போன்று வரும் சர்ச்சைகளுக்குகாக கடந்த 15 ஆம் தேதி அதிமுக வின் ஒருங்கிணைப்பாளரும்,துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் அமைச்சர்கள்
ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.இதன் பின் இதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடை இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றாக கூட்டாக அறிக்கை ஒன்றை  வெளியிட்டனர் அந்த அறிக்கையில் முதல்வர் வேட்பாளர் குறித்து இனி வருங்காலங்களில் யாரும் பேசி சர்ச்சையை ஏற்படுத்த கூடாதுனு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில்,பரமக்குடியில்  அதிமுக வின் இளைஞர்,இளம்பெண் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய மாநில சிறுபான்மையினர் பிரிவு செயலாளரும்,முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா கடந்த காலங்களில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் பல கட்சிகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனவே முதல்வர் வேட்பாளர் பற்றி பேசுவதால் ஒன்றும் நடைபெற போவதில்லை,கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கபடாமலே தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா முதல்வரானார்.ஆனால் அதே நிலை தற்போது நீடிக்காது.வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தான் அதிமுக தேர்தலை சந்திக்கும் என்று பேசினார்.அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் குறித்து யாரும் பேசக்கூடாது என தலைமை எச்சரித்துள்ள நிலையில் தற்போது அன்வர் ராஜா பேசியது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.