கல்வி உதவித்தொகை பெற தேர்வு கட்டாயம்! இன்று முதல் தொடங்கும் விண்ணப்பம்!
மத்திய அரசு சார்பில் பீடி,சுண்ணாம்புக் கல்,டோலமைட்,சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணபங்கள் கடந்த ஜூலை மாதம் முதல் வரவேற்கப்பட்டது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் நடப்பாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
ஒன்பதாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ 1000 முதல் ரூ 25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்காக தேர்வுகள் வைக்கப்படும். அந்த தேர்வானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு விண்ணபங்களை மாணவர்கள் இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை https://dgel.tn.gov.in என்ற இணைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.