5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தமிழக அரசால் ரத்து! ராமதாஸின் கோரிக்கைதான் காரணமா..?

0
139

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தமிழக அரசால் ரத்து! ராமதாஸின் கோரிக்கைதான் காரணமா..?

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவது தொடர்பாக 13.09.2019 அன்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கடந்த காலத்தில் எழுதிய பழைய தேர்வுகளின் முறையில் இறுதி ஆண்டுத்தேர்வும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுத்தேர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடந்த 28 ஆம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். இது சம்பந்தமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் அழைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கலந்து ஆலோசித்தார்.

கூட்டணி கட்சியான பாமக தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தாமல் இருக்க பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமைச்சர் சொங்கோட்டையனிடம் முதல்வர் சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவர் ராமதாசுடன் பொதுத்தேர்வு நடத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசித்ததாகவும் சொல்லப்படுகிறது.

பொதுத்தேர்வுக்கு எதிராக பாமக போராட்டம் அறிவித்தது பின்னர்,போராட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதில் மருத்துவர் ராமதாசு தலையீடு ஒரு காரணமாக இருக்குமோ..? என்றும் ஒரு கருத்து பேசப்படுகிறது. இதனையடுத்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு 2019-2020 கல்வியாண்டின் முதல் பொதுத்தேர்வு நடத்துவதாக கூறப்பட்ட அரசாணையை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மேலும் தேர்வானது பழைய நடைமுறையின் படியே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.