வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் திக் திக் நிமிடங்கள்!
கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வரும் நிலையில் அராசங்கம் மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியதில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.தற்போது முழுமையாக இரண்டு ஆண்டுகள் ஆகிறது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு.ஆனால் இடையில் ஓர் முறை தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.அவ்வாறு திறக்கப்பட்ட போது கொரோனா தொற்று அதிகமாக பரவியதால் மாணவர்களுக்கும் தொற்று பரவல் ஏற்பட்டது.
அதனால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.அதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு ஆனலைன் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டது.ஆனால் பள்ளிகளுக்கு வகுப்புகள் மட்டும் தான் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.தேர்வுகள் குறிப்பிட்ட மாநிலங்களில் நடைபெறவில்லை.முதலாம் ஆண்டு கொரோனா தொற்றின் போது 12 –ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்திருந்தது.
அதனையடுத்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவில்லை.அனைவருக்கும் பாரபட்சம் இன்றி தமிழக அரசு மற்றும் இதர மாநிலங்களில் உள்ளவர்களும் ஆள் பாஸ் செய்தனர்.இந்த வருடமும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகளவு தீவீரம் காட்டி வந்தது.அதனால் டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களும் பத்து மற்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி ஆள் பாஸ் செய்தது.தேர்வு நடத்த நேர்ந்தால் மாணவர்களின் கூட்டம் கூடும் என்பதாலும் மற்றும் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியாது என்ற காரணத்தினால் ஆள் பாஸ் செய்தனர்.
ஆனால் கேரளா அரசோ இந்த கொரோனா காலக்கட்டத்திலும் வெற்றிகாரமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது.முன்னதாகவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டது.அந்த பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அம்மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறியுள்ளார்.அதனால் இன்று மதியம் கேராளவின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.