20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தேர்வு முறையில் மாற்றம்! தமிழக அரசு அரசாணை.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இரண்டு கேள்வித்தாள் முறைகளை தமிழ்
மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடம் தேர்வுகளில் இனி ஒரே கேள்வி தாள் முலம் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்தில் 2 கேள்வித்தாள் முறைகளை நிக்கி உள்ளது. ஆசிரியர் சங்கத்தின் மற்றும் பொதுவான கல்வி அமைப்புக்களின் கோரிக்கையை ஏற்று அரசு தேர்வுதுறை இயக்குனர் மே 4ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் இரண்டு தேர்வு முறையை ரத்து செய்வதாக அரசாணை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்திற்கு இரண்டு கேள்வி தாள்களும் ஆங்கில பாடத்திற்கு கேள்வி தாள்களும் இடம்பெறாது. மற்ற பாடத்திற்கு இடம்பெறுவதை போல ஒரே கேள்விதாள் முறை வரும் காலாண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வரும்.
இதனால் ஆசிரியர்களின் கற்பிக்கும் முறை சிறப்படையவும் மேலும் மாணவர்களின் மன அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கும். தேர்வுத்தாள்களை திருத்தும் பணி எளிமையாகவும் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிடவும் இந்த அறிவிப்பு உதவும். இந்த அறிவிப்புக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் மேலும் கல்வியாளர்கள் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இரண்டு கேள்வித்தாள் முறைகளை கடந்த ஜூன் 2018 ஆம் ஆண்டு நீக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்த குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர், இரண்டு கேள்வித்தாள் முறைகளை மாற்றியதன் மூலம் 3 கோடி எண்ணிக்கையில் தாள்கள் சேமிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.